Petra Fagerström Spring 2027: Duality of a Woman
The LVMH Prize finalist delivered intricate, either-or hybrids that could live comfortably on the shop floor. from Fashion

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நாயகனாக நடிக்கும் படத்தை அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர் ‘இப்போதைக்கு பட ரிலீஸ் சாத்தியமா என்று தெரியவில்லை. அதுவரை எங்களுக்காக ஒரு நடன வீடியோ வெளியிடலாமே?’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஷாருக் கான் ‘இல்லை நண்பா, ஏராளமான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன’ என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment