Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் படங்களுக்கான போட்டி!
கரோனா அச்சுறுத்தல் குறைந்துவரும் தருணத்தில், 19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து வருகிறது இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம்.இந்த விழா வரும் டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை 8 நாட்கள் சென்னையில் நடக்கிறது. 60-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள உலக சினிமாக்கள் அதில் திரையிடப்பட இருக்கின்றன. இதில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியும் நடத்தப்படுகிறது.
இதுபற்றி திரைப்பட விழாவின் இயக்குநர் தங்கராஜ் கூறும்போது, ‘‘சிறந்த படம் முதல் பரிசு, சிறந்த படம் 2-வது பரிசு, நடுவர்கள் சிறப்பு பரிசு ஆகிய 3 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு கடந்த 2020 அக்டோபர் 16தொடங்கி, 2021 அக்டோபர் 15-ம்தேதி வரை தணிக்கை செய்யப்பட்ட படங்களை நவம்பர் 11-ம்தேதிக்குள் அனுப்பலாம். கூடுதல்விவரங்களை www.icaf.in என்றஇணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Stella Jean’s Haitian Olympic Uniforms Are Meant to Send a Message
- Get link
- X
- Other Apps
Polimoda Business Week: Connecting Talents With Companies
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment