Featured
- Get link
- X
- Other Apps
இரட்டிப்பு மகிழ்ச்சி!

‘டிக் டாக்’ காணொலிகள் வழியாக கோலிவுட்டில் நுழைந்து, முதல் வரிசை கதாநாயகி ஆகியிருக்கும் புதுச்சேரி தமிழ்ப் பெண் மிருணாளினி ரவி. விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் படமான 'எனிமி', சசிகுமார் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ ஆகிய 2 படங்களிலும் இவர்தான் கதாநாயகி. இரண்டுமே தீபாவளி வெளியீடு. ‘எனிமி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த மிருணாளினி, ‘‘எனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்திலேயே இப்படி ஒரு பெரிய படம் கிடைத்தது அதிர்ஷ்டம்.
என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கர், தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமாருக்கு நன்றி. விஷால் அனுபவமிக்க நடிகர். அவருடன் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால், எளிமையாகப் பழகி என் பயத்தை போக்கினார். ஆர்யாவுடன் எனக்கு காட்சி இல்லை. எதிர்காலத்தில் நிச்சயம் அவருடனும் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தீபாவளி எனக்குஇரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது’’ என்று கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Maison Francesco Scognamiglio Fall 2025 Couture: Back at It
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment