மதன் பாப் எனும் ‘நைட்ரஸ்-ஆக்சைடு’!
மதன் பாப்பை இந்த உலகம் காமெடியனாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் அவர் ஒரு காமெடியன் அல்ல. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவர் ஒரு ரியல் ஹீரோவை போல் வாழ்ந்தவர். எப்போதும் விலை உயர்ந்த ஆடைகளையும், விலை உயர்ந்த காலணிகளையும், விலை உயர்ந்த காஸ்ட்யூம் பொருட்களையும், விலை உயர்ந்த சென்ட் வகைகளையும் உபயோகிக்கக்கூடிய ஒரு வாசனை மனிதர். சென்ட் வகைகளிலேயே 20 வகையான சென்ட்களை அவர் பயன்படுத்துவார். குறிப்பாக, படப்பிடிப்புக்குப் போகும்போது, காரில் பயணிக்கும் போது, விழாக்களில் கலந்து கொள்ளும் போது என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உடை அலங்காரம், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான சென்ட் ஆகியவற்றை பயன்படுத்துவது அவரது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment