Skip to main content

Featured

ரூ.24 லட்சம் மோசடி: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

கேன்ஸ் பட விழாவில், பிரதமர் மோடியின் முகம் பதித்த நெக்லஸ் அணிந்து பரபரப்பானவர் ருச்சி குஜ்ஜார். இந்தி நடிகையும் மாடலுமான இவரை, படத் தயாரிப்பாளர் கரண் சிங் சவுகான் என்பவர் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார். சின்னத்திரை தொடர் ஒன்றை தயாரிக்கஇருப்பதாகவும் சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அதில் இணை தயாரிப்பாளராகச் சேரும்படி ருச்சி குஜ்ஜாரை கேட்டுக் கொண்டார். அதை நம்பி பல்வேறு கால கட்டங்களில் ரூ.24 லட்சத்தை வங்கி மூலம் அவருக்கு அனுப்பினார் ருச்சி. ஆனால் அதை அவர் தயாரிக்கும் ‘சோ லாங் வேலி’ என்ற படத்துக்குப் பயன் படுத்திக்கொண்டார். இதனால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு ருச்சி கேட்டபோது பணத்தைக் கொடுக்காமல் மிரட்டினாராம். இதையடுத்து ஓஷிவாரா போலீஸ் ஸ்டேஷனில் ருச்சி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Redmi Watch 2 and Redmi Buds 3 launched in China: Specs and other details



from Gadgets News – Latest Technology News, Mobile News & Updates

Comments