
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment