Skip to main content

Featured

பொங்கல் போட்டியிலிருந்து பின்வாங்குகிறதா ​‘ஆர்ஆர்ஆர்’?

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதற்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments