Skip to main content

Featured

‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இதில் பிரதீப் ரங்கநாதன், “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், 'இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?' என கேட்டார். அதற்கு நான் 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார். from இந்து தமிழ...

 'வீரமே வாகை சூடும்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்திலும் சில காட்சிகளை சென்னையிலும் படமாக்கியுள்ளது படக்குழு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments