Skip to main content

Featured

நகைச்சுவை, சென்டிமென்ட் கதையில் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு 'கார்மேனி செல்வம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகும் இதை, பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கிறார். யுவராஜ் தக் ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ராம் சக்ரி கூறும்போது, “ அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் சமுத்திரக்கனிக்குத் திடீரென்று பணத்தின் மீது ஆசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது, அவருடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து நகைச்சுவைத் ததும்ப இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம்," என்றார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Valentino Couture Spring 2022

It was an haute experiment in dressing women with a variety of body frames — and everyone looked gorgeous.

from Fashion

Comments