Skip to main content

Featured

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படப்பிடிப்பு நிறைவு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். ஆஸ்கர் விருது பெற்றுள்ள இவர், ‘இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லர்', ‘டெனெட்', 'தி டார்க் நைட் டிரையலாஜி', `தி பிரஸ்டீஜ்' போன்ற படங்களை இயக்கி புகழ் பெற்றவர். அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட்ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இவர் இயக்கிய 'ஓப்பன்ஹெய்மர்' உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இவர் அடுத்து இயக்கியுள்ள படம், 'த ஒடிஸி'. இதில் மாட் டேமன், டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஆனி ஹாத்வே உட்பட பலர் நடித்துள்ளனர். ஹோமரின் கிரேக்க காவியமான ‘தி ஒடிஸி’யைமையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. புதிய ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகும் இந்தப்படம் உலகம் முழுவதும் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.இதன் படப்பிடிப்பு இத்தாலி, மொராக்கோ, ஸ்காட்லாந்து உள்பட 8 நாடுகளில் நடந்து வந்தது. இதற்கிடையே இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ...

Fabletics Expands Its Franchise to Swimwear

The collection of seven styles in five colors will be offered online and in the brand's stores on April 1.

from Fashion

Comments