John Richmond Spring 2027: Pop Heaven
Dave Stewart, whose latest album is set for release on Oct. 30, performed — albeit briefly — following the show, with the designer singing a few notes. from Fashion

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வெளியான நான்கு நாளில் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இந்த படத்தில், அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் 'பீஸ்ட்' படத்திற்கு 'கேஜிஎஃப் 2' திரைப்படம் வசூல் ரீதியாக கடும் போட்டியை கொடுத்தது. இந்நிலையில், 'பீஸ்ட்' படம் இந்திய பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ரூ.150 கோடியை வசூல் செய்த விஜய்யின் 6வது படம் 'பீஸ்ட்' என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment