Skip to main content

Featured

வரவேற்பை பெற்ற ‘குபேரா’ முதல் பாடல்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். அவர் இசையில் விவேகா எழுதியுள்ள 'போய் வா நண்பா' என்ற பாடல் யூடியூப்பில் நேற்று வெளியானது. தனுஷ் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அழிவை நோக்கித் தெலுங்கு சினிமா!


“தெலுங்குல எல்லாம் பாருங்க எப்படி இருக்காங்க ஹீரோக்கள் எல்லாம், படம் ஓடலைன்னா காசைக்கூடத் திரும்பக் கொடுத்துடுறாங்க. கணக்கு வழக்கு எல்லாம் சரியா கொடுத்துருவாங்க. அதைவிட முக்கியம் டிக்கெட் விலை. ஹைதராபாத்துல 80 ரூபாய்க்குப் புதுப்படம் பாக்கலாம். அங்க பார்க்கிங் கட்டணம் கிடையாது. நொறுக்குத் தீணியெல்லாம் எம்.ஆர்.பி விலை தான்” இப்படி நாலு பக்கத்துக்கு அக்கட தேச சினிமாவைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் விரைவில் “நம்மூரைப் போல...” எனப் புலம்பப் போகிறார்கள். ‘அப்படி என்ன நடக்கப் போகிறது?’என்பவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரையே.


சில பல வருடங்களுக்கு முன் ‘மகதீரா’ என்கிற படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் வளர்ந்து வந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படம். மிகப் பெரிய ஹிட். இங்கே தமிழில் தாணு அவர்கள் டப் செய்து வெளியிடப் போவதால் நேரடித் தெலுங்குப் பதிப்பு தமிழ்நாட்டில் கிடையாது என்று முடிவாகிவிட்டதால், நானும் என் நண்பர்களும் நகரி போய் படம் பார்ப்பது என்று முடிவெடுத்துப் போய் பார்த்தோம். படம் வந்து கிட்டத்தட்ட இருபது நாளுக்கு மேல் ஆகியிருந்த நேரம். அந்த ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தது. அதில் ஒன்று ஏசி. ஏசி தியேட்டரில் ஒரு படம். நாகசைதன்யா படமோ, அவரின் அப்பாவின் படமோ ஓடியது. படத்தின் தலைப்பு மறந்துவிட்டது. அப்படம் தோல்வி. அதே நேரத்தில் இந்த தியேட்டர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. சென்னையிலிருந்து விநியோகஸ்தர்கள் என்று சொல்லித்தான் டிக்கெட்டே கிடைத்தது. பால்கனி டிக்கெட்டுக்காகப் பணம் கொடுத்தபோதுதான் தெரிந்தது ஏன் தெலுங்கு சினிமா வாழ்கிறது, என்று. மூன்று டிக்கெட்டுகளுக்கும் சேர்த்து 60 ரூபாயோ என்னவோதான் வாங்கினார்கள். ஏதாச்சும் டிஸ்கவுண்டா? என்று கேட்டதற்கு “டிக்கெட் ரேட் அந்தே சார். மீ ஊருலாகா லேது’என்று சிரித்தபடி போனார்கள். நம்மூர் கதை தெரிந்த தியேட்டர் மேனேஜர், அன்றைய ப்ளாக் நாட்களில் இதைப் பற்றிக்கூட எழுதியதாய் ஞாபகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments