Skip to main content

Featured

ராமதாஸ் வாழ்க்கை கதை சினிமாவாகிறது: விரைவில் படப்பிடிப்பு

திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருவது இப்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. சேரன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘அய்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மருத்துவர் ராமதாஸாக ஆரி அர்ஜுனன் நடிக்கிறார். ‘பிக் பாஸ் 4’ டைட்டில் வின்னரான இவர், நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை அமைக்கிறார். ராமதாஸின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை சேரன், ராமதாஸ், தமிழ்க்குமரன் வெளியிட்டனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

The Trend: Beach Party Fashion

For summer 2022, beach fashion is embracing a playful spirit across categories.

from Fashion

Comments