Featured
- Get link
- X
- Other Apps
‘கே.ஜி.எஃப்’ பட நடிகருக்கு புற்றுநோய்

பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய். இவர் ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களில் காசிம் சாச்சா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாரிடமும் தெரிவிக்காமல் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சிகிச்சைக்குப் பண உதவி கேட்டுள்ளார்.
இதுபற்றி அவர், ‘‘கடந்த 3 வருடமாகத் தொண்டைப் புற்றுநோயால் அவதிப்படுகிறேன். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நீண்ட தாடியுடன் நடித்திருப்பேன். இந்த நோயால், என் கழுத்தில் இருந்த வீக்கத்தை மறைக்கவே அப்படி வைத்திருந்தேன். என்னிடம் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்தேன். இப்போது நோய் தீவிரமடைந்து விட்டது. என் சேமிப்பு இதுவரையான சிகிச்சைக்கு செலவழிந்துவிட்டது. மீதமுள்ள சிகிச்சைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாதம் ரூ.3 லட்சம் செலவாகிறது. முன்னணி நடிகர் ஒருவர் எனக்கு உதவி இருக்கிறார். நன்கொடையாளர்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment