Featured
- Get link
- X
- Other Apps
“நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்?” - சிவகார்த்திகேயனிடம் வெங்கட் பிரபு கேள்வி

'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படம் மற்றும் மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' என ஒப்பந்தம் ஆகியுள்ள சிவகார்த்திகேயன், அதற்கடுத்ததாக வெங்கட் பிரபு உடன் இணையவுள்ளார்.
இந்த அறிவிப்பை பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வெங்கட் பிரபு இப்போது நாகசைதன்யாவை ஹீரோவாக வைத்து தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையிலும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். இருவரும் தங்களின் கமிட்மென்ட்களை முடித்த பின்னர் இணையலாம் என்றும், அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment