Skip to main content

Featured

“இப்படி ஒரு நட்பு கிடைப்பது கஷ்டம்” - சிம்பு குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5 வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு ஏற்பாடு செய்தது. இதில கமல்ஹாசன் பேசியதாவது: “மணிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எல்டாம்ஸ் சாலையில் நாங்கள் முதல்முறை சந்தித்தபோது, ​​மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்து, ​​பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசியதில் 25 சதவீத விஷயங்களை மட்டுமே செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன், மற்றொன்று ‘தக் லைஃப்’. நாஙகள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனென்றால், எந்தப் படத்திலும் எங்கள் எல்லா கனவுகளையும் நனவாக்க முடிய...

உருவாகிறது தி ஃபேமிலி மேன் 3 - உறுதிப்படுத்திய நடிகர் மனோஜ் பாஜ்பாய்

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர், ‘தி ஃபேமிலி மேன்’. ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசனும் வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதுவும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதன் 3வது சீசன் உருவாகுமா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், அதை உறுதி செய்துள்ளார் நடிகர் மனோஜ் பாஜ்பாய். “அமேசான், அதை முன்பே தொடங்கி இருக்கும். ராஜ் மற்றும் டீகே, அவர்களுடைய மற்ற வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், ‘தி ஃபேமிலிமேன் 3’ அடுத்த வருடம் தொடங்கும்” என்று அவர் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments