Featured
- Get link
- X
- Other Apps
''பல இயக்குனர்களுக்கு எடிட்டிங் அறை அனுபவம் இல்லை’’ - எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

திரைப்பட படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியில், திரைப்படப் படத்தொகுப்பின் நுணுக்கங்களைப் பற்றிய முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்ரீகர் பிரசாத், "திரைப்பட இயக்குநர்கள் பார்வையாளர்களை நன்கு அறிந்திருக்க வேண்டும், அவர்களது விருப்பங்களை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். பார்வையாளர்களை நன்கு அறியும் இலக்கை அடைவது படத்தின் வெற்றியை உறுதிப்படுத்த உதவுகிறது." என்றார்.
தொடர்ந்து படங்களில் காணப்படும் மிகைப்படுத்தல்கள் பற்றி பேசியவர், "படம் மற்றும் நடிகர்களைப் பொறுத்து மிகைப்படுத்தலின் அளவு மாறுபடும். ‘ஸ்டார் படங்களில், ரசிகர்களை மகிழ்விக்கும் தருணங்களை பெரிதுபடுத்துகிறோம். ஒவ்வொரு அனுபவமும் இன்னொரு அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அனுபவம் கற்றுக்கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்க வேண்டும். இது முடியாது போலிருக்கிறது என்று கை விட்டு விடுவது மிகவும் எளிதானது. ஆனால் இலக்கை நோக்கி உழைத்து அதை அடைவது மிகவும் சவாலானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment