
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம், ‘காந்தாரா’. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டானது.
இதில் இடம்பெற்ற 'வராஹ ரூபம்' பாடல், கேரளாவை சேர்ந்த பிரபல ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் ‘நவரசம்’ என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கோழிக்கோடு செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்த வழக்கில், பாடல் காப்பி அடிக்கப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தய்க்குடம் பிரிட்ஜ் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இதனால், அந்தப் பாடலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment