Skip to main content

Featured

கோவில்பட்டி பெண்ணாக நடிக்கிறார் சித்தி இட்னானி

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்தவர் சித்தி இட்னானி. இவர் சசி இயக்கும் ‘நூறு கோடி வானவில்’, முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார். முத்தையா இயக்கும் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார் சித்தி இட்னானி.

இதில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் கோவில்பட்டி பெண்ணாக நடிக்கிறேன். கிராமத்துப் பெண்ணாக நடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. பால் கறப்பது, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, மொபட் ஓட்டுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அந்த வட்டாரப் பேச்சுவழக்கில் பேசி நடிப்பது கடினமாக இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments