
நடிகர் சசிகுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க உள்ள நிலையில், அந்தப்படத்தின் கதாநாயகனாக அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சுப்ரமணியபுரம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். ஜெய், சசிகுமார் நடிப்பில் 2008-ல் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘ஈசன்’ படத்தை சசிகுமார் இயக்கினார். இதனையடுத்து அவர் நடிப்பில் கவனம் செலுத்தத்தொடங்கினார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment