Céline Dion’s Paris Residency Has Its First Sweet Souvenir
Pastry maven Pierre Hermé collaborated with the Canadian superstar on limited-edition gift boxes of macarons, to drop first at Galeries Lafayette. from Fashion

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத். இவர் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் உருவாகும் ‘கேடி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பெங்களூரில் உள்ள மகடி ரோடு அருகே இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சமீபத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. பிரபல சண்டை இயக்குநர் ரவிவர்மா காட்சியை அமைத்தார். அப்போது குண்டு வெடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டன. அந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சஞ்சய் தத், எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்தார். கண்ணாடி துண்டுகள் சிதறியதில் அவர் முகம், கை மற்றும் முழங்கையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
Comments
Post a Comment