Featured
- Get link
- X
- Other Apps
விடாமுயற்சி | அஜித் பிறந்தநாளன்று வெளியான படத் தலைப்பு!

சென்னை: நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 1) அவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது அப்படியே நடந்துள்ளது.
‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ‘ஏகே 62’-லிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பு தரப்பு கதையில் மாற்றங்களை செய்ய சொன்னதாகவும், அதற்கு விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ளாததால் படத்திலிருந்து அவர் விலகப்பட்டார் என தகவல் வெளியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Maison Francesco Scognamiglio Fall 2025 Couture: Back at It
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment