Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: “மின்னல் முரளி’ படத்துக்கும் ‘வீரன்’ படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என நடிகர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
‘மரகத நாணயம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் ‘வீரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ஆதி, “ஜூன் 2-ம் ‘வீரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று பார்க்கலாம். எந்த முகச் சுழிப்பு காட்சிகளும் இதில் இருக்காது. நம்பி போகலாம். நான் இரண்டு வருடங்கள் படிப்பதற்காக ப்ரேக் எடுத்தேன். நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் 2 ஆண்டுகள் நேரம் எடுத்து பிஹெச்டி படித்துவிட்டு வந்துள்ளேன்.
Comments
Post a Comment