Skip to main content

Featured

பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்கிறார் சமந்தா

மும்பை: நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயில் இருந்து மீண்ட பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் அவர், இப்போது விஜய தேவரகொண்டாவுடன் ‘குஷி’படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘சிட்டாடெல்’ வெப் தொடரின் இந்திய பதிப்பில், சமந்தா நடித்து வருகிறார். இந்தி நடிகர் வருண் தவண் உட்பட பலர் நடிக்கும் இதை, ‘தி பேமிலிமேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இந்தத் தொடரில் நடிகை சமந்தா, பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 1980, 90-களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா, வருண் தவண் நடிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments