Skip to main content

Featured

நன பரதத மதல தமழப படம பரயறம பரமள - கவனம ஈரதத ஈரட கடதல ஆடசயரன பதவ

“நான் பார்த்த முதல் தமிழ்படம் ‘பரியேறும் பெருமாள்’ என ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் நரனவாரே தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் திருநெல்வேலி சப்-கலெக்டராக இருந்தபோது, நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் 2018-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "பரியேறும் பெருமாள்". உண்மையாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திரைப்படம். இப்படிப்பட்ட திரைப்படத்தை தைரியத்துடன் எடுத்த மாரி செல்வராஜூக்கு ஹேட்ஸ்ஆஃப். இந்தப் படத்தை நேற்று நான் மீண்டும் பார்த்தேன். இன்று திங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவர்களுடன் உரையாடினேன். "எல்லா மனிதர்களும் சமமாகப் பிறந்தவர்கள்” என்ற இந்தப் படத்தின் முக்கியமான செய்தியை மாணவர்களுக்கு பகிர்ந்தேன்” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு கவனம் ஈர்த்துவருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments