Skip to main content

Featured

நெட்ஃப்ளிக்ஸ் ஆங்கில தொடரில் இடம்பெற்ற விஜய் பட பாடல்

சென்னை: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ வெப் தொடரில் விஜய் படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மிண்டி கலிங் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 8ஆம் தேதி வெளியான தொடர் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ - சீசன் 4 (Never Have I Ever). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் ஒருவர் தனது பள்ளிப்பருவத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து இத்தொடர் பேசுகிறது. மைத்ரேயி ராமகிருஷ்ணன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts