Featured
- Get link
- X
- Other Apps
நடிகர்கள் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதிக்கு நிச்சயதார்த்தம்

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். இப்போது அதர்வா ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, இளம் ஹீரோ வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின. இதை லாவண்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில் நாளை லாவண்யா திரிபாதி - வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், நாளை ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமாக நடக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. திருமண நிச்சயதார்த்தம் குறித்த அழைப்பிதலும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment