Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதையடுத்து ரஜினிகாந்தின் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து அவரது 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அது ரஜினியின் கடைசிப் படம் என்றும் செய்திகள் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தில், ‘கே.ஜி.எஃப்’ யாஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment