Skip to main content

Featured

கங்கா... கங்கா... கங்குவா - சூர்யாவின் ‘கங்குவா’ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts