Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: நடிகர் சூர்யா, இப்போது ‘கங்குவா’படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இந்தப் படத்தில் திஷா பதானி, இந்தி நடிகர் பாபி தியோல், நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 43 வது படமான இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான் இணைந்து நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். கேங்ஸ்டர் கதையான இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது.
Comments
Post a Comment