Featured
- Get link
- X
- Other Apps
‘தெறி’ இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்?

மும்பை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ், ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அஜய்தேவ்கன் ஜோடியாக ‘மைதான்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருந்தார். அப்போது உடலை மிகவும் குறைத்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் அதில் பிரியாமணி நடித்தார்.
இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ இந்தி ரீமேக்கில் வருண் தவண் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகிறார். முதலில் ஜான்வி கபூர் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். படத்தில் 2 ஹீரோயின் இருப்பதால் இவர்கள் இருவரும் நடிக்கலாம் என்று தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Maison Francesco Scognamiglio Fall 2025 Couture: Back at It
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment