Featured
- Get link
- X
- Other Apps
‘எல்.ஜி.எம்’ ஒரு ஃபேன்டஸி கதை: இயக்குநர் தகவல்

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியும், அவர் மனைவிசாக் ஷியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தமிழில்‘எல்.ஜி.எம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தை இயக்கி இசை அமைத்திருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படம்பற்றி இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, 'இந்தப் படத்துக்கான கதைக் கருவை, சாக் ஷி தோனி சொன்னார். மிகவும் பிடித்திருந்தது. அதை விரிவாக்கம் செய்து கொடுத்தேன். அதுதான் இந்தப் படம். இது ஜாலியான திரைப்படம். இதில் சினிமாத்தனமான வசனங்கள் இல்லாமல், இயல்பான வசனங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் கதை சர்வதேச அளவுக்கானது. கதையில் நாங்கள் தீர்வு எதையும் சொல்லவில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி இருக்கிறோம். இது ஒரு ஃபேன்டஸி கதை. குடும்பத்தில் இருக்கும் மாமியார்,மருமகள் அவர்கள் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் பொருத்தமானது என்பதைச் சொல்லியிருக்கிறோம். இதை அறிவுரையாகச் சொல்லாமல் அற்புதமான தருணங்களாக உணர்த்தியிருக்கிறோம்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment