Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

சென்னை: மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படம் வெள்ளிக்கிழமை வெளியானது. வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக, ‘எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து கடந்த வாரம் சென்னை வந்தார். ஹைதராபாத், கேரளா, சென்னை என புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், பட ரிலீஸுக்கு மறுநாள் ‘எஸ்கே 21’ படத்துக்காக காஷ்மீர் சென்றார்.
இந்தப் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
Comments
Post a Comment