Skip to main content

Featured

சின்னத்திரை: ஜீ தமிழில் ‘இதயம்’ ஆக.28 முதல் ஒளிபரப்பாகிறது

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘இதயம்’ என்ற புதிய தொடர் 28-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. நாயகியின் காதல் கணவன் விபத்தில் மூளைச்சாவு அடைகிறார். இன்னொருவர் இதய பிரச்சினையால் உயிருக்குப் போராடுகிறார். தனது கணவனின் இதயம் இந்த உலகத்தில் தொடர்ந்து துடிக்கட்டும் என்று தானம் செய்கிறாள் நாயகி. உண்மை காதலுக்கு அழிவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இதய மாற்று அறுவைச் சிகிச்சையால் உயிர் பிழைக்கும் நபருக்கு, நாயகியைப் பார்க்கும் போதெல்லாம் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. அந்த நாயகிக்கும் அவள் குழந்தைக்கும் பாதுகாவலனாக இருக்க நினைக்கிறார். இவர்கள் வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கிறது என்பது கதை. நாயகியாக ஜனனி அசோக் குமார் நடிக்க, நாயகனாக ரிச்சர்ட் ஜோஸ் நடிக்கிறார். வரும் 28-ம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts