Featured
- Get link
- X
- Other Apps
“என்னை வைத்து படம் எடுக்க பலரும் யோசித்தார்கள்” - நடிகர் விமல் ஆதங்கம்

சென்னை: “இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசிக்கும் அளவுக்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. அந்த சமயத்தில் என்னை நம்பி வந்த படம்தான் இந்த ‘துடிக்கும் கரங்கள்” என நடிகர் விமல் பேசியுள்ளார்.
வேலூர்தாஸ் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் விமல் பேசுகையில், “பலரும் ஏன் உங்கள் படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இனி அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகும். இப்போதெல்லாம் நிறைய கையெழுத்துக்கள் போடுவதில்லை. அதனால் இனிமேல் எனக்கு படங்கள் நிறைய வரும். சினிமாவுக்கு வந்த புதிதில் நம்ம படம் தானே என நீட்டிய இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டு விட்டேன். ஆனால் அதற்கெல்லாம் பின்னாடி மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்தது. இதை தற்போது புரிந்துகொண்டேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment