Featured
- Get link
- X
- Other Apps
தமிழ், தெலுங்கில் உருவாகும் படம்: ‘நித்தம் ஒரு வானம்’ இயக்குநர் திட்டம்

சென்னை: அசோக் செல்வன், ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா, காளிவெங்கட் உட்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸும் ரெய்ஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தை அவர் இயக்க இருக்கிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “ ‘நித்தம்ஒரு வானம்’ ‘ஃபீல் குட்’ திரைப்படம்.அதற்குச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் பொறுப்பும் அதிகரித்துள்ளது. சிறந்த கதையை படமாக்க வேண்டும் என்பதால், அடுத்த கதையை இப்போதுதான் முடித்தேன். இது வேறு ஜானர் படம். முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேசி வருகிறோம். ரெய்ஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment