Featured
- Get link
- X
- Other Apps
விஷால் மக்கள் நல இயக்க விழா திடீர் ரத்து

விஷால் நடித்துள்ள படம், ‘மார்க் ஆண்டனி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா நாயகி. எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் செப்.15-ல் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா செப்.3-ம் தேதி நடக்கிறது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் இருந்து விஷால்மக்கள் நல இயக்க நிர்வாகிகளை, சுமார் 300 பேருந்துகளில் அழைத்து வந்து, நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், அதற்கு நேரு உள்விளையாட்டரங்க நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. 300 பேருந்துகளில் வந்தால் அதற்கான இடம் போதாது என்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்றும் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால் தீவு திடலில் நடத்த நினைத்திருந்தனர். அந்த திட்டமும் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment