Bottega Veneta Opens Chicago Store
As of Sept. 30, there were 53 Bottega Veneta stores in the U.S. from Fashion
சென்னை: டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘அலங்கு’. இதை எஸ்.பி.சக்திவேல் இயக்குகிறார். இவர் உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கியவர். குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். செம்பன் வினோத், சரத் அப்பானி, காளிவெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஷ் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் சக்திவேல் கூறும்போது, “அலங்கு என்பது தமிழ்க்குடியின் முதல் நாட்டு நாய் இனத்தைச் சார்ந்தது. இந்தக் கதையின் அடிப்படைத் தன்மைக்கு இந்தப் பெயர் பொருந்தி இருப்பதால் இதை வைத்துள்ளோம். தமிழக- கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் இது.
Comments
Post a Comment