Skip to main content

Featured

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இதயம் கணிந்த நன்றிகள்” - ஜெயிலர் வெற்றி குறித்து நெல்சன் நெகிழ்ச்சி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி சொல்லி இயக்குநர் நெல்சன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை இந்தப் படம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments