Yeti Launches Performance Apparel
The brand, best known for its coolers and drinkware, has created a capsule of base layers and outerwear for men and women. from Fashion

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷண், நிவேதா, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டிசம்பர் 15ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ‘அருவி’அதிதி பாலன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் காட்சிகள் சுதந்திரத்துக்கு முந்தைய கதையில் வருகிறது என்றும் ‘கேப்டன் மில்லர்’இரண்டாம் பாகம் உருவானால் அதில் இவர் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment