Featured
- Get link
- X
- Other Apps
‘படை தலைவன்’ படத்துக்காக கேரளாவில் அசத்தல் அரங்கம்
சென்னை: விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘படை தலைவன்’. கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படம் இது. கதை ஒடிசாவில் நடப்பதுபோல படமாக்கப்படுகிறது. சகோதரனை போலபாவிக்கும் யானைக்கு ஒன்று என்றால் ஹீரோ அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது கதை. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்துகின்றனர். கிளைமாக்ஸ் காட்சிக்காக பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அதை முடித்துவிட்டு யானை தொடர்பான காட்சிகளை தாய்லாந்தில் படமாக்க உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Stella Jean’s Haitian Olympic Uniforms Are Meant to Send a Message
- Get link
- X
- Other Apps
Polimoda Business Week: Connecting Talents With Companies
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment