Featured
- Get link
- X
- Other Apps
''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' - மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், "எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு" என்று நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆம், அடக்க நினைத்தால் அடங்க மறு. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்.எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து. அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment