Featured
- Get link
- X
- Other Apps
‘போட்’ 1940-களில் நடக்கும் படம்

சென்னை: இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், புலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கசடதபற உட்பட சில படங்களை இயக்கிய சிம்புதேவன், இப்போது இயக்கியுள்ள திரைப்படம், ‘போட்'. ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார். இதில் யோகி பாபு, கவுரி ஜி கிஷன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முழுவதும் கடலில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை, 1940-களின் பின்னணியில் உருவாகியுள்ளது. சென்னை மீது ஜப்பான் குண்டு வீசியபோது உயிருக்குப் பயந்து 10 பேர் சின்ன படகில் தப்பிக்கிறார்கள். நடுக்கடலில் அந்தப் படகு நகர முடியாமல் நின்று விடுகிறது. அவர்கள் அதில் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பது கதை. இந்தப்படம் த்ரில்லர், ஆக்ஷன், பொலிட்டிக்கல் காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டீஸர் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. படம், பிப்ரவரியில் வெளியாகும் என்று தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment