
சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச முதல் நாள் வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ் தவிர்த்து ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று (டிச.22) திரையரங்குகளில் பான் இந்தியா முறையில் வெளியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment