Featured
- Get link
- X
- Other Apps
‘அனிமல்’ படம் வெற்றி: கண்ணீர் விட்ட பாபி தியோல்

மும்பை: தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘அனிமல்’. இதில், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பாபி தியோல் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்துக்கு வந்த பாபி தியோலிடம் புகைப்படக் கலைஞர்கள், அனிமல் படத்தில் அவர் நடிப்பை பாராட்டி கூறினர். அப்போது, “கருணை காட்டிய கடவுளுக்கு நன்றி. இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு கனவு போல இருக்கிறது” என்றார். பின்னர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். உதவியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நீண்ட காலத்துக்கு பிறகு பாபி தியோலுக்கு ஹிட் கிடைத்துள்ளதால் அவர் கண்ணீர் விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment