Skip to main content

Featured

குடும்பத்தினர் தாக்குதல்: நடிகை போலீஸில் புகார்

இந்தி சின்னத்திரை நடிகை வைஷ்ணவி தன்ராஜ். இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சிஐடி தொடரில் நடித்ததன்மூலம் பிரபலமடைந்தார். இவர் தனது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனக்கு உதவி தேவை என்றும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தனது முகம், கைகளில் ஏற்பட்டுள்ள காயத்தையும் அவர் காட்டுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில்உள்ள காஷ்மிரா காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். “வைஷ்ணவி, தனது சகோதரன் மற்றும் தாய் மீது புகார் கொடுத்துள்ளார். அவர்களை வரவழைத்து விசாரித்தோம். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த சண்டை நடந்துள்ளது. அவர்களை எச்சரித்து அனுப்பினோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதின் சஹ்ராவத் என்ற நடிகரை திருமணம் செய்த வைஷ்ணவி 2016-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts