Featured
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவில் இளம் பெண்ணுடன் வலம் வரும் விஷால்: வைரலாகும் வீடியோ

சென்னை: நடிகர் விஷால், இப்போது ‘ ரத்னம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். அங்கு இளம் பெண் ஒருவருடன் நடந்து செல்லும் அவர், தன்னை ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்ததும் வேகமாக ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதில், நடிகர் விஷால் இளம் பெண் ஒருவருடன் நடந்து செல்கிறார். ரசிகர் ஒருவர், விஷால் என்று அழைக்கிறார். திரும்பிப் பார்க்கும் விஷால், அவர், வீடியோ எடுப்பதைக் கண்டதும் ஹூடி உடையால் தலையை மூடியபடி வேகமாக ஓடுகிறார். அந்தப் பெண்ணை நடிகர் விஷால் காதலித்து வருகிறாரா? யார் அவர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment