Featured
- Get link
- X
- Other Apps
பரினீதியிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்த படம், ‘அனிமல்’. வசூல் குவித்த இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது பரினீதி சோப்ரா என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பரினீதியைதான் முதலில் ஒப்பந்தம் செய்தோம். அவரின் ரசிகன் நான். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. நான் இந்தியில் அறிமுகமான ‘கபீர் சிங்’ படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்படித்தான் ‘அனிமல்’ படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்தோம். ஆனால், அந்த கீதாஞ்சலி கேரக்டருக்கு அவர் பொருந்தவில்லை. படத்தை விட மற்றது பெரிய விஷயமில்லை என்பதால் அவருக்குப் பதிலாக, ராஷ்மிகாவை நடிக்க வைத்தோம். இதற்காக பரினீதாவிடம் மன்னிப்புக் கேட்டேன். ‘இது என் தவறுதான். இதற்காக முடிந்தால் என்னை மன்னியுங்கள்’ என்றேன்’’ என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment