Featured
- Get link
- X
- Other Apps
ஹங்கேரியில் ‘கள்வன்’ பின்னணி இசை

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், அறிமுக இயக்குநர் பி.வி.சங்கர் இயக்கும் ‘கள்வன்' படத்தில் நடித்து வருகிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்தில் பாரதிராஜா, இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாடல்களுக்கான இசையை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ளார். பின்னணி இசையை ரேவா அமைக்கிறார். ‘நக்கலைட்ஸ்’ ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதன் பின்னணி இசையை ஹங்கேரியில் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி ரேவா கூறும்போது, “இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம்” என்றார். அடுத்த வருடம் படம் வெளியாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment