Featured
- Get link
- X
- Other Apps
திரை விமர்சனம்: ஃபைட் கிளப்

கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்கிற செல்வாவின் (விஜயகுமார்) கனவுக்கு உதவ வருகிறார், அவர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). இந்நிலையில், போதைப் பொருள் விற்கும் ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்), தன் நண்பன் கிருபாகரனுடன் (சங்கர் தாஸ்)சேர்ந்து, தனது தொழிலை எதிர்க்கும் சொந்த அண்ணன் பெஞ்சமினைக்கொன்றுவிடுகிறார். இந்தக் கொலைக்காக ஜோசப் சிறை செல்ல, கிருபாகரன் அரசியல்வாதியாக வளர்கிறார். செல்வாவின் கால்பந்தாட்ட கனவு சிதைகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் ஜோசப், கிருபாகரனை அழிக்க செல்வாவைப் பயன்படுத்துகிறார். அவர் திட்டம் நிறைவேறியதா? செல்வாவின் வாழ்க்கை என்னவாகிறது என்பது கதை.
ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமாகச் சொல்லமுயற்சி செய்திருக்கிறார், அறிமுக இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத்.அதற்கு அவரின் ‘மேக்கிங்’கும், அதிரடியாக மிரட்டும் சண்டைக் காட்சிகளும் அழகாகக் கைகொடுத்திருக்கின்றன. ஆனால், முதல் பாதிவரை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைக்கதை, இரண்டாம் பாதிக்குப் பிறகு வழக்கமான, வட சென்னை கதையாகி, தடுமாறத் தொடங்கிவிடுகிறது. மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை என்பதால், அவர்களும் அவர்களைச் சுற்றிய துணைகதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், காட்சி அமைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment